கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

மின்மாற்றி தாக்கத்தினால் பற்றி எரிந்த இலத்திரணியல் உபகரணங்கள் -காலை இருதயபுரத்தில் சோகம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் மின்மாற்றியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக வீடுகளில் உள்ள மின்சார பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் இருவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை இருயதபுரம்04ஆம் குறுக்கில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே இந்த நிலையேற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக வீடுகளில் இருந்த இலத்திரணியல் உபகரணங்கள் சேதமடைந்துள்ளதுடன் இருவர் மின்தாக்கத்திற்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலமை காரணமாக குறித்த பகுதியில் பதற்ற நிலையேற்பட்டதுடன் குறித்த பகுதிக்கு வந்த மின்சாரசபை ஊழியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தன் காரணமாக அங்கு பதற்ற நிலமையேற்பட்டதுடன் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இன்று காலை மின்மாற்றியில் ஏற்பட்ட பாரிய சத்ததினை தொடர்ந்து வீடுகளில் இருந்த மின்விசிறிகள் வெடித்து சிதறியுள்ளதுடன் பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களும் சேதமடைந்துள்ளனர்.

தற்போது அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதன் காரணமாக என்னன்ன இலத்திரணியில் பொருட்கள் சேதமடைந்துள்ளன என்பது தொடர்பில் அறியமுடியாத நிலையுள்ளதாகவும் ஆனால் இலத்திரனியல் பொருட்களில் இருந்து எரிந்த வாசைன வருவதன் காரணமாக சேதமடைந்திருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மின்தாக்கம் காரணமாக இருதயபுரம் 04,05,06ஆம் குறுக்கு வீதிகளிலும இருதயபுரம் பிரதான வீதிகளில் உள்ள வீடுகள் வர்த்தக நிலையங்களிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிக்குவந்த இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர் அஜித்துகுமார்,மட்டக்களப்பு பிராந்திய மின் அத்;தியட்சகர் பிரசாந்தன் ஆகியோர் மின்மாற்றி தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் மின்மாற்றியினை மீள இயங்க செய்து மின்விநியோகத்தினை சீர்செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

அத்துடன் குறித்த மின்மாற்றி கீழ் நோக்கி இருப்பதனால் குறித்த மின்மாற்றியுள்ள பகுதி மக்கள் பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளவதாக சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து குறித்த மின்மாற்றியை உயரமாக பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.