கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் காலவரை இன்றி மூடப்பட்டுள்ளதாக பீடாதிபதி தெரிவித்தார்


(லியோன்)

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரைக்கும் மூடப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி  வைத்தியர் திருமதி  ஏஞ்சலா அருள்பிரகாசம் தெரிவித்தார்


கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட பகிடிவதை வதை காரணமாக கடந்த 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் மூடப்பட்டுள்ளதாக  பீடாதிபதி தெரிவித்தார் . 

மருத்துவ பீட மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை காரணமாக ஐந்து மாணவர்கள் தற்காலியமாக கல்வி நடவடிக்கையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .

குறித்த சம்பவம் தொடர்பாக  மருத்துவ பீட மாணவர்களுக்கு , மருத்துவ பீட பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களுக்கும் இடையில் (28) பிற்பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்  முடிவுகள் எடுக்கப்படாத நிலையில்  தொடர்ந்து மறு அறிவித்தல் வரும் வரைக்கும் மூடப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி  வைத்தியர் திருமதி  ஏஞ்சலா அருள்பிரகாசம் தெரிவித்தார். 

இடம்பெற்ற கலந்துரையாடலின் போது  பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களினால்  முன்வைக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய மாணவர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற பகிடிவதை வதை தொடர்பான செயல்  திட்ட  அறிக்கைகள் உத்தரவாதத்துடன்  சமர்பிக்கும் பட்சத்தில் அதனை பரிசீலனை செய்து  மீண்டும் மருத்துவ பீடம் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பீடாதிபதி  தெரிவித்தார்.