இளைஞர் யுவதிகளுக்கான உதவும் கரங்கள் தொழில் மையம்


(லியோன்)

மட்டக்களப்பு  செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வறுமை கோட்டின் கீழ் வாழும் பெண்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் மையம்   திறந்து  வைக்கப்பட்டுள்ளது
  

உதவும் கரங்கள் அமைப்பு அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகங்களுக்கிடையில் சகவாழ்வு , சமூக அபிவிருத்தி , மாணவர்களுக்கான கல்வி அபிவிருத்தி  மற்றும் கல்வியில் இடைவிலகிய இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு போன்ற  பல சமூக பணிகளை  முன்னெடுத்து வருகின்றன  

இதன்கீழ்  உதவும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில்  தலைவர் எ ஞானம் தலைமையில் உதவும் கரங்கள் தொழில் மையம் மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலானந்தபுரத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது

இதன் தொழில் மையம் ஊடாக மட்டக்களப்பு  செங்கலடி ஏறாவூர்a பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப உறுப்பினர்களில்  தெரிவு செய்யப்பட பயனாளிகளுக்கும்  மற்றும் யுத்தம் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட  வேலைவாய்ப்பற்ற இளைஞர் ,யுவதிகளுக்கும் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உதவும் கரங்கள் அமைப்பினால் இந்த  தொழில் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது,

இந்நிகழ்வில்  பிரதம விருந்தினர்களாக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ் .ரங்கநாதன் , ஏறாவூர் பற்று பிரதேச  சபை செயலாளர் கே பேரின்பராஜா , சிறப்பு அதிதிகளாக ஏறாவூர் பற்று மின் அத்தியட்சகர் கே சிவேந்திரன் , கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப உத்தியோகத்தர்  வி எஸ் . கிரிஷ்ணபில்லை  அதிகளாக பூர்ணிமா கருணாகரன் , எ டி . ஜெகநாதன் , எ .நீர்மோகன் , ஆர் .சங்கீதா , அமைப்பின் செயலாளர் எஸ் ஜெயராஜா , மற்றும் மாணவர்களா பயனாளிகள் கலந்துகொண்டனர்