ஈஸ்டன் ஸ்டார் 11வது ஆண்டு வெற்றிக்கிண்ணத்தை இக்னேசியஸ் விளையாட்டு கழகம் சுவிகரித்துக்கொண்டது


(லியோன்)

மட்டக்களப்பு  இருதாயபுரம் ஈஸ்டன் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் ஈஸ்டன் ஸ்டார் விளையாட்டு கழகத்தின்
11வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட கழகங்களில் பதிவு செய்யப்பட 32 கழகங்களுக்கிடையில் அணிக்கு  7 பேர் கொண்ட நொக்கவுட் முறையில் நடத்தப்பட்ட  உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிபோட்டி  நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு இருதயபுரம் ஈஸ்டன் ஸ்டார் விளையாட்டு கழக மைதானத்தில்  நடைபெற்றது 
ஈஸ்டன் ஸ்டார் விளையாட்டு கழக தலைவர் வி .ரவிராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதிகளாக  மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் , பாராளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசன்  மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளன செயலாளர் டி .காந்தன் ,மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்க சுற்றுப்போட்டி குழு தலைவர் பி .மேவின் , மாநகர சபை உறுப்பினர்களான பூபாலராஜா , தவராஜா ஆகியோர் கலந்துகொண்டனர் .


ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வீரர்களினால் வரவேற்பு அளிக்கப்பட்டு வீரர்களின் அறிமுகத்துடன் இறுதி போட்டி ஆரம்பமானது


அணிக்கு  7 பேர் கொண்ட 32 கழகங்களுக்கிடையில் நொக்கவுட் முறையில் நடத்தப்பட்ட  உதைப்பந்தாட்ட  சுற்றுப்போட்டியில் இறுதி போட்டிக்கு தெரிவான மட்டக்களப்பு கல்லடி டச்பார் இக்னேசியஸ்  விளையாட்டு கழக அணியினரும் மட்டக்களப்பு கல்லடி - நாவலடி கோல்ட் பிஷ் விளையாட்டு கழக அணியினரும் மோதிக்கொண்டன .

 நடைபெற்ற  நொக்கவுட் முறையிலான  இறுதி போட்டியில்  மோதிக்கொண்ட  மட்டக்களப்பு கல்லடி டச்பார் இக்னேசியஸ்  விளையாட்டு கழக அணி மற்றும் மட்டக்களப்பு கல்லடி - நாவலடி கோல்ட் பிஷ்  விளையாட்டு கழக அணி மூன்றுக்கு பூஜ்யம் (3-0)  என்ற கோல் கணக்கில் மட்டக்களப்பு கல்லடி டச்பார் இக்னேசியஸ்  விளையாட்டு கழக அணி வெற்றி பெற்று .ஈஸ்டன் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் 11வது ஆண்டு வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது .