கோராவெளி அம்மன் விழாக்காண கடலலையென திரண்டெழும் மக்கள் வெள்ளம்!




(ராம்) 
அற்புதங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த மட்டக்களப்பு கிரான் கோராவெளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 29.05.2018(செவ்வாய்) அதாவது வைகாசி விசாக தினமான நாளை இடம்பெறவுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்(கோறளைப்பற்று தெற்கு) பிரிவிற்குட்பட்ட கோராவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள் அடர்ந்த காட்டின் நடுவே நெழிந்து ஓடும் ஆற்றின் மத்தியில் ஆள் அரவமற்ற அமைதியான சூழலில் மிகவும் எழிமையாகவும் சூக்குமமாகவும் வீற்றிருந்து தன்னை வேண்டுவோருக்கெல்லாம் அருள்புரிந்து அருள்பாலிக்கும் அன்னை கோராவெளி கண்ணகை அம்மன் மிகவும் அற்புதமானவள்.

ஒரேயொரு நாள் மாத்திரமே இடம்பெறும் இவ்விளாவினை மீராவோடை,
கிண்ணையடி, கிரான், கோரகல்லிமடு, சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, சித்தாண்டி போன்ற கிராமங்களைச்சேர்ந்த மக்கள் ஒன்றுசேர்ந்து பந்தல்களை அமைத்து மிகவும் கோலாகலமாக நடாத்தி அம்மனின் அருள்பெற்றுவருகின்றனர்.

இவ்விளாவானது கிரான் பிரதேச செயலாளரின் தலமையில் இடம்பெறுவதுடன் சுகாத திணைக்களம்(கிரான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்), வாழைச்சேனை பிரதேச சபை மற்றும் வாழைச்சேனை வைத்தியசாலை மருத்துவ பிரிவு என்பன அங்கு முகாமிட்டு வருகை தரும் பக்தர்களின் நலனுக்காக சேவை புரிகின்றனர்.

இவ்விழா இடம்பெறும் ஆலயச்சூழலில் பற்பல அற்பதங்கள் இடம்பெறுவதுடன் பல ஆச்சரியமான விடயங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது!!!