மட்டக்களப்பில் வெசாக் வார நிகழ்வு

தேசிய வெசாக் வார நிகழ்வுகள் வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றன.

கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலயம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் காரியாலயம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் காரியாலயம் என்பன இணைந்து நேற்று மாலை மாபெரும் வெசாக் நிகழ்வினை நடாத்தினர்.

கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரரினால் பிரித் ஓதப்பட்டு அனுசாசனம் வழங்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலயம் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் காரியாலயம் ஆகியனவற்றில் விசேட வழிபாடுகள் நடைபெற்று மக்களுக்கு தானம் வழங்கப்பட்டது.

இதன்போது ஓளியூட்டப்பட்ட வெசாக்கூடுகளை பார்வையிடுவதற்காகவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான மக்கள் இனமத வேறுபாடுகளுக்கு அப்பால் மட்டக்களப்பு நகரில் ஒன்றுகூடினர்.