நாவற்காடு பாரத் இளைஞர் கழகத்தை வீழ்த்திய கன்னங்குடா கண்ணகி இளைஞர் கழகம்.

நாவற்காடு பாரத் இளைஞர் கழகத்தை வீழ்த்திய கன்னங்குடா கண்ணகி இளைஞர் கழகம்.

மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள் கடந்த திங்கட்கிழமை முதல் ஆராம்பமாகி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான கிறிக்கட் போட்டித் தொடரில் திறமையான பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பால் கன்னங்குடா கண்ணகி இளைஞர் கழகம் நாவற்காடு பாரத் இளைஞர் கழக அணியை வெற்றி கொண்டூ இந்த வருடத்திற்கான சம்பியன் அந்தஸ்த்தை பெற்றுக்கொண்டது.

நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற கன்னன்குடா கண்ணகி இளைஞர் கழகம் முதலில் துடுப்பாட்டதை தெரிவு செய்து நாவற்காடு பாரத் இளைஞர்கழக அணியை களத்தடுப்பு செய்ய அழைத்தது.

அதன் பிரகாரம் எட்டு ஒவர்களை எதிர் கொண்டு எட்டு வீரர்களை இழந்து 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது கண்ணகி இளைஞர் கழகம்.

எட்டு பந்து வீச்சு ஓவர்களுக்கு 57 என்ற   வெற்றியிலக்கை நோக்கி பதிலாட்டத்தை தொடர்ந்த நாவற்காடு பாரத் இளைஞர் கழக அணி  கண்ணகி இளைஞர்கழக  பந்துவீச்சாளர்களின் திறமையான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது 06.4 பந்துகளுக்கு அணைத்து விக்கட்டுக்களையும் இழந்து 40 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 18 ஓட்டங்களால் தேல்வியை தழுவிக்கொண்டது.

சிறப்பான களத்தடுப்பு துடுப்பாட்டம் மூலம் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற கன்னங்குடா கண்ணகி இளைஞர் கழகம் இந்தவருடத்திற்கான மண்முனை மேற்கு பிரதேசத்தின் கிறிக்கட் சம்பியன் என்ற நாமத்தை பெற்றுக்கொள்கிறது.

எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கிடையிலான மாவட்ட ரீதியிலான கிறிக்கட் போட்டியில் மண்முனை மேற்கு பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றுவதற்கும் கண்ணகி  இளைஞர் கழகம் தகுதி பெறுகின்றது.

போட்டியின் ஆட்டநாயகனாகவும்  தொடர் ஆட்ட நாயகனாகவு   வினோத்  தெரிவு செய்யப்பட்டார். (மூன்று போட்டிகளில் ஆறு (6) ஓவர்கள் பந்து வீசி 22 ஓட்டங்களுக்கு 13 விக்கட்டுக்களை வீழ்த்தியமை)


கன்னன்குடா கண்ணகி இளைஞர் கழகம் முதலிரு போட்டிகளில் கொத்தியாபுலை செழுஞ்சுடர் இளைஞர் கழக அணியையும், ஆயித்தியமலை வடக்கு கதிர் இளைஞர் கழக அணியையும் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

போட்டிச்சுருக்கம்

01. கண்ணகி இளைஞர் கழகம் 61/10. ஓ 08

  கொத்தியாபுலை செழுஞ்சுடர் இளைஞர் கழகம் 23/10. ஓ 07.01

02. கண்ணகி இளைஞர் கழகம் 73/05. ஓ 08

ஆயித்தியமலை வடக்கு கதிர் இளைஞர் கழகம்
17/10  ஓ 04.04

கடந்தவருடம் ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர்கழகம் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.