மட்டக்களப்பில் நிலையான அபிவிருத்தி இலக்கினை அடையும் இளைஞர் மாநாடு .

(சசி துறையூர்)   2016 ம் ஆண்டு தொடக்கம் 2030ம்  ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் ஜக்கிய நாடுகள் சபையினால் அடைய எத்தணிக்கும் நிலையான 17 அபவிருத்தி இலக்குகளையும் நடைமுறைப்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்ட இளம் தலைவர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கடந்த 22.04.2018 ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு வை எம் சி ஏ மண்டபத்தில் இடம் பெற்றது.



ஐக்கிய நாடுகள் சபையினால்  முன்மொழியப்பட்டு 193 நாடுகளின் தலைவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு,

2016 ம் ஆண்டு தொடக்கம் 2030ம்  ஆண்டு வரையான காலப்பகுதியில் அடைய எத்தணிக்கும் நிலையான 17 அபவிருத்தி இலக்குகளையும்,

இலங்கையில் நடைமுறைப் படுத்துவதற்காக , ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கிளை நிறுவனமாக இலங்கையில் செயற்பட்டு வரும் இலங்கை ஐக்கிய நாடுகளின் கூட்டுறவுச் சங்கத்தால்,


இலங்கையில்உள்ள 25 மாவட்டங்களிலும் உள்ள 332 பிரதேச பிரிவுகளிலும் பிரதேச இணைப்பாளர் உட்பட்ட 21 இணைப்பாளர் கொண்ட இலங்கை நிலையான அபிவிருத்தி இலக்கு இளைஞர் வலையமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காக,

 உலக இளைஞர் தினத்தில்
12.08.2017 அன்று பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உத்தியோக பூர்வமாக மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

அந்த வகையில் மட்டக்களப்பு  மாவட்டத்தில் 14 பிரதேச பிரிவுகளிலும் இயங்கி வருகின்ற 294 உறுப்பினர்களுக்கும் நியமனசான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட நிலையான அபிவிருத்தி இலக்கு  இளைஞர் மாநாடு எனும் தலைப்பில் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் மனோகரன் சுரேஸ்காந்தன் (கல்வி அமைச்சர் இளைஞர் பாராளுமன்றம்) தலைமையில் YMCA மண்டபத்தில் 22.04.2018 அன்று இடம்பெற்றது.


இந்  நிகழ்வில் அதிதியாக ,இலங்கை ஐக்கிய நாடுகளின்  நட்புறவுச் சங்கத்தின்  பணிப்பாளர் நாயகம் கலாநிதி  தேசப்பிரிய  விஐயதுங்க , ஜேலங்கா நிறுவனத்தின் திட்ட முகாமையாளர்  பொறியியலாளர் ஐீவக்க கலப்பதி , YMCAன் பிரதம நிறைவேற்று  அதிகாரி ஐெகன் ஐீவராஐா , பொலிஸ் அதிகாரிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட,

பிரதேச இணைப்பாளர்களான ந.திவாகர், A.H.ஹசன், M.M.M.றிப்கி, அ.வினோத், M.அக்கில், கோ.தினேந்திரன், M.H.அஷிம், ந.கிஷோத், ம.பிரியங்கன், ஜே.அன்று, கு.ரவிசேகர், ம.மோகனதீஸ், அ.தர்சிக்கா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

காலை 9.00 மணி முதல் 5.00 மணிவரை இடம்பெற்ற இந் நிகழ்விற்கு ஐேலங்கா நிறுவனத்தினர் அனுசரனை வழங்கியிருந்ததுடன் புதுப்பிக்கத் தக்க வளங்கள் தொடர்பான கருத்தரங்கும் நடாத்தப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட  தலைவர் உட்பட 14  பிரதேச இணைப்பாளர்களுக்கும் சேவைப் பாராட்டு பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் 294 உறுப்பினர்களுக்கும் நியமன சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.