அமிர்தகழி கிராமத்திற்கான முதல்வரின் முதல் விஜயம்


(லியோன்)

மட்டக்களப்பு அமிர்தகழி கிராம சேவை பிரிவுக்குட்பட்ட  பகுதியான  முதலாம் வட்டாரத்தில்  முன்னெடுக்கப்பட வேண்டிய வீதி புனரமைப்புகள் தொடர்பாக மாநகர முதல்வர் நேற்று மாலை நேரில் சென்று  பார்வையிட்டார்


கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு அமிர்தகழி முதலாம் வட்டாரத்தில் போட்டியிட்டு மாநகர உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள  தம்பிராஜா இராஜேந்திரன் அழைப்பின் பேரில் அமிர்தகழி கிராமத்திற்கு  முதல் விஜயத்தை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் ,ஆகியோர் இன்று மேற்கொண்டார் .

இந்த விஜயத்தின் போது கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் அக்கிராமத்தில் புனரமைக்கப்பட வேண்டிய வடிகான்கள் மற்றும் வீதிகளை பார்வையிட்டார் .

இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது கிராம மக்களால் முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட முதல்வர் இங்கு கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் காலங்களில் இக்கிராம மக்களின்  ஒத்துழைப்புடன் மாநகர சபையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக மாநகர சபையினால் ஒதுக்கீட்டு செய்யப்படுகின்ற நிதியின் கீழ் இக்கிராமத்திற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார் ,

இதேவேளை தற்போது லையின் அமைச்சு மற்றும் நெல்சிப் திட்டத்தின் ஊடாக மாநகர சபைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியில் இருந்து சில வீதி புனரமைப்புக்களை   இக்கிராமத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதன் போது தெரிவித்தார்  

இந்த மக்கள் சந்திப்பில்  மாநகர பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் , மாநகர சபை உறுப்பினர் ,மதன் ஆகியோர் கலந்துகொண்டனர்