மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கரம் போட்டியில்..........மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒழுங்கமைப்பில்,  மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை (24.04.2018) ஆண் பெண் இரு பாலாருக்குமான கரம் போட்டி (தனி சோடி) நடைபெற்றது.

பெண்களுக்கான தனிப் போட்டியில் ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த எம்.கிருஷாந்தி,

ஆண்களுக்கான தனிப்போட்டியில்  கொத்தியாபுலை செழுஞ்சுடர் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த அ.ஜதீஸ்வரன் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டனர்.

இரட்டையர் (சோடி) போட்டியில் (ஆண்கள்)
புதுமண்டபத்தடி சண்முகா இளைஞர் கழகத்தைச்சேர்ந்த ரி.வேணுராஜ், வி.சங்கர் சோடியும்,

பெண்களுக்கான போட்டியில் ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழக எம்.கிருஷாந்தி ரி.பவித்திரா சோடியும் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டது.