பிரம்ம குமாரிகளின் புதுவருட கலாசார நிகழ்வு


(லியோன்)

புதுவருடத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட விசேட புதுவருட கலாசார நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தில்  நடைபெற்றது
.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையங்களின் ஆசிய பசுபிக் கண்டங்களுக்கான பொறுப்பாளரும் , பிரம்ம குமாரிகள்  ஆன்மீகப் பல்கலைக்கழகத்தின் நல்லுலகத்திற்கான ஆன்மீக கல்வியின் ஊற்றாம் கியான் சரோவரின் பணிப்பாளருமான 55 ஆண்டு கால தவயோகினி வைத்தியர் நிர்மலா கஜாரியா மற்றும் இலங்கைக்கான பிரம்ம குமாரிகள் இராஜயோக தலைமை பொறுப்பாளர் சகோதரர் கணேஷ் , தலைமையக அலுவலக பொறுப்பாளர் சகோதரி சபித்தா  ஆகியோர்  கலந்துகொண்டார்

மட்டக்களப்பு மாவட்ட பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலைய பொறுப்பாளர் சகோதரர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற  புதுவருட நிகழ்வில் பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலைய மாணவர்களின் கலை பிரம்ம குமாரிகள் கலாசார நிகழ்வுகளும் ,55 ஆண்டு கால தவயோகினி வைத்தியர் நிர்மலா கஜாரியாரின் ஆன்மீக உரையும் இடம்பெற்றன .

இந்த பிரம்ம குமாரிகள் ராஜயோகமானது  உலக வரலாற்றில் ஆன்மீக சேவையில் தனக்கென ஓர் தனியிடம் பிடித்து இனம் ,மதம் மற்றும் மொழிகளை கடந்து மனிதனின் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பிரம்ம குமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழகம் பெரும் பங்காற்றி வருகின்றது .

பிரம்ம குமாரிகள் உலக ஆன்மீக பல்கலைகழகமானது 1973 ஆண்டில் தாதா லோக்ராச் என்பவரால் இந்தியாவில் தோற்றம் பெற்று 8  பெண்கள் கொண்ட நிர்வாக குழுவின் கீழ் சீரான கட்டமைப்போடு இன்று வரை பெண்களால் வழிநடத்தப்படும் மிகப்பெரிய ஆன்மீக நிறுவனமாக கருதப்படுகின்றது .

இலங்கையில் 55.பிரம்ம குமாரிகள் ராஜயோகம் நிலையங்கள் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது