வாகரையில் வெளிநாட்டு முகவர் தாக்கப்பட்ட வழக்கு- வாகரை பிரதேசசபை தவிசாளர் உட்பட எட்டு பேர் பிணையில் விடுதலை

வெளிநாட்டு முகவர் ஒருவர் தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைதுசெ;யயப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த வாகரை பிரதேசசபையின் தவிசாளர் உட்பட எட்டுப்பேர் பிணையில் நேற்று புதன்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வாகரை கதிரவெளி பகுதியில் கடந்த 09ஆதிகதி மூதுரை சேர்வ்நத வெளிநாட்டு வேரலைவாய்ப்பு முகவர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் வாகரை பிரதேசபையின் தவிசாளர் கோணலிங்கம் ,கிராம சேவையாளர்,அதிபர் ஒருவர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐந்து பேர் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த நிலையில் வாகரை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

இவர்கள் எட்டு பேரும் இன்று வாகரை சுற்றுலா நீதிமன்றில் நீதிவான் ஏ.சி.ஏ.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேக நபர்களின் சார்பில் பிரபல சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டத்தரணியுமான கி.துரைராஜசிங்கம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இன்று சந்தேக நபர்கள் அடையாளா அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் பிரதிவாதியினால் யாரும் அடையாளம் காட்டப்படாத நிலையில் எட்டுப்பேரும் 50ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.