கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஸ்ட ஈடுகள்


(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் அசாதாரண நிலமைகளினால் பாதிக்கப்பட்டு இதுவரையில் நஸ்ட ஈடுகள் வழங்கப்படாத நிலையில் காணப்பட்ட ஆவணங்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் உதவியுடன் பயனாளிகளின்  ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டவர்களுக்கான  நஷ்ட ஈடுகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு ,மண்முனை வடக்கு டேபா மண்டபத்தில்  இன்று நடைபெற்றது .


இதன் போது ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட 259  ஆவணங்களுக்கு  19.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாதிக்கப்பட்ட பயனாளிகள் , அரச உத்தியோகத்தர்கள் ,சேதமாக்கப்பட்ட மத வணக்கஸ்தலங்கள்  ஆகியவற்றுக்கான நஷ்ட ஈடுகள்  வழங்கி வைக்கப்பட்டது .

இதேவேளை சிறைச்சாலை மறுசீரமைப்பு புணர்வாழ்வளிப்பு,  மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் இணைந்து இயங்குகின்ற புனர்வாழ்வு ஆணையாளர் பணிமனையின்  கீழ் ஒருவருடகாலம் புனர்வாழ்வு பெற்று  சமூகங்களுடன் இணைந்து கொண்ட முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகளும் , சுயதொழில்  ஊக்குவிப்பு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது

சிறைச்சாலை மறுசீரமைப்பு புணர்வாழ்வளிப்பு,  மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எந்திரி பி .சுரேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் , பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா .ஸ்ரீ நேசன் ,எஸ் .வியாலேந்திரன் . எஸ் .யோகேஸ்வரன் ,புனர்வாழ்வு அதிகாரசபையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் என்.புவனேந்திரன், புனர்வாழ்வு அதிகாரசபையின் தலைவர் இ அன்னலிங்கம் , புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக மற்றும் உயர் மட்ட அதிகாரிகள் , பிரதேச செயலாளர்கள் கலந்துகொண்டனர்