மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்


(லியோன்)

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால்  மாபெரும் சிரமதான பணி  இன்று மட்டக்களப்பு சத்துருகொண்டான் ஒசானம் நிலைய வளாகத்தில்  மேற்கொள்ளப்பட்டது  
 .

மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளினால் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்றனர் .

இதன் கீழ் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக  மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே .எம் . யு , எச் . அக்பர் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு சத்துருகொண்டான் விசேட தேவையுடைய மாணவர்களின்  ஒசானம் நிலைய வளாகத்தினை துப்பரவு செய்யும்  சிரமதான பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டது  .

இதனுடன் இணைந்ததாக விசேட தேவையுடைய மாணவர்களுக்கான உலர்வுணவு பொருட்களும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால்  வழங்கி வைக்கப்பட்டது .

இன்று  முன்னெடுக்கப்பட்ட  சிரமதான பணியில் சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் பிரதம ஜெயிலர் உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்