மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாட்டில் தேசிய ஒற்றுமையினை ஏற்படுத்தும் வெசாக் நிகழ்வு

தேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வெசாக் நிகழ்வானது இம்முறை மங்களகம  ஸ்ரீ தர்மராமய விகாரையில் விகாராதிபதி வண.பி.சந்தரத்தன ஹிமியின் ஆசிகளுடன் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில்  (29) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது.


செங்கலடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மங்களகமவில் நடைபெற்ற இந்நிகழ்வானது மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி பிரித்பாராயண மற்றும்  வெசாக் நிகழ்வுகள் நடைபெற்று வெசாக் அலங்காரப் பந்தல்கள் திறந்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. 

இனவேறுபாடுகளை களைந்து இன ஒற்றுமையினை ஏற்படுத்தும் வகையில் அனைத்து மத தலைவர்களும் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் கலந்துகொண்ட நிகழ்வாக இந்த வெசாக் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது வைபவ ரீதியாக வெசாக் காட்சிப் பந்தல்கள் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரால் ஒளியூட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன்.வெசாக் காட்சிப் பந்தல்கள் கண்காட்சியும், காட்சிப் பந்தல்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் மற்றும் பொது மக்களென பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.