சமுர்த்தி பயனாளிகளின் சௌபாக்கியா கண்காட்சியும் விற்பனையும்


(லியோன்)

சித்திரை  புதுவருடத்தை  முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகளின் சமுர்த்தி சௌபாக்கியா சந்தைப்படுத்தல் கண்காட்சியும் விற்பனையும் மட்டக்களப்பில் நடைபெற்றது
 
சமுர்த்தி தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தல்,  தொழில் முயற்சிகளுக்கான  ஊக்குவிப்பு ,வெற்றிகரமான வர்த்தக சமூகம் ஒன்றினை உருவாகுதல், சந்தைப்படுத்தல் திறமை , தொழில் முயற்சியாளர்களின் ஆற்றல்களை மேம்படுத்தல் மற்றும் புதிய சந்தை வாய்ப்புக்களை  இனங்காண்பது தொடர்பாக சமுர்த்தி திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்தி பொருட்களை  சந்தைப்படுத்தம்  சமுர்த்தி சௌபாக்கியா வேலைத்திட்டங்களை நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன .

இதன்கீழ் தமிழ் சிங்கள சித்திரை புதுவருட நிகழ்வை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் சமுர்த்தி சௌபாக்கியா கண்காட்சியும் விற்பனையும் கல்லடி பால சந்தையில் நடைபெற்றது .

பிரதேச செயலாளர் கே .குணநாதன் தலைமையில் நடைபெற்ற  நிகழ்வில் மட்டக்களப்பு  மண்முனை வடக்கு பிரதேச செயலக  சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்கள்  ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி வலய வங்கி உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி பயனாளிகள்  என பலர் கலந்துகொண்டனர்