வெசாக் தினத்தினை முன்னிட்டு 5 கைதிகள் விடுதலை


 (லியோன்)

வெசாக்   தினத்தினை முன்னிட்டு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் சிறு குற்ற சிறைத்தண்டனை  கைதிகளை பொது மண்ணிப்பின் கீழ்  இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்றினால் குற்ற செயல்களுக்கு  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு மட்டக்களப்பு  சிறைச்சாலையில் வைக்கப்பட்ட சிறு குற்ற   தண்டனை கைதிகள்   5  பேர்   வெசாக் தினத்தினை  முன்னிட்டு   மட்டக்களப்பு சிறைச்சாலை  அத்தியட்சர்   K.M.U.H அக்பர்  முன்னிலையில்   இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த  நிகழ்வில்  மட்டக்களப்பு  சிறைச்சாலை  பிரதம ஜெயிலர்  மோகனராஜா ,மட்டக்களப்பு சிறைச்சாலை  புனர்வாழ்வு உத்தியோகத்தர் விக்கிரம சிங்க , சிறைச்சாலை நலன்புரி  உத்தியோகத்தர்கள்  , சிறைச்சாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்   மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்    

.