கிறிஸ்மா எண்ணெய் அர்ச்சிக்கப்படும் விசேட திருப்பலி


(லியோன்)

கிறிஸ்மா எண்ணெய் அர்ச்சிக்கப்படுகிற விசேட திருப்பலி மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் புளியந்தீவு மரியாள்  பேராலயத்தில் (26)   திங்கள்கிழமை  நடைபெற்றது .


மறை மாவட்ட ஆயருடன் மறைமாட்டத்தில் பணியாற்றும் அருள் பணியாளர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து தங்களது ,ஒற்றுமையின் ,ஒருமைப்பாட்டின் ஒன்றிப்பினை காட்டும் திருப்பலியாக இன்றைய திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது

மறைமாவட்டத்தின் பல்வேறு திசைகளிலும் வாழும் அருள் பணியாளர்கள் மறைமாநில பேராலயத்தில் ஆயருடன் இணைந்து அப்ப இராச வடிவங்களில் வலியுறுத்தும் நாளாகவும் , கத்தோலிக்க அருளடையாள வாழ்வின் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய்களின் புனிதப்படுத்தல் நாளாகும்  .

இந்நாளில் திருமுழுக்கு ஆயத்த எண்ணெய் ,நோயாளர்களுக்கான எண்ணெய் ,என்பன புனிதப்படுத்தப்பட்டு கிறிஸ்மா எண்ணெய் அர்ச்சிக்கப்படுகிற இந்த வழிபாடு கத்தோலிக்கத் திரு அவையின் மிகப்பழமையான மரபாகும் .

இதன் தலைமை என்றுமே ஆயராவர் .இந்நாளில் அருள்  பணியாளர் தாங்கள் பெற்றுக்கொண்ட   குருத்துவ பணி வாழ்வினையும் ,புதுப்பித்துக்கொள்கின்றார்கள்.

சவால்கள் நிறைந்துள்ள குருத்துவ பணி வாழ்விற்கு உறுதியையும் , ஆழமான  அர்ப்பணிபயனையும்  அருட் பணியாளர்கள் மத்தியில் ஒற்றுமையின் ,ஒருமைப்பாட்டின் ஒன்றிப்பினை காட்டும் வழிபாடாக இந்த திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .

இந்த விசேட திருப்பலியில் மறைமாவட்டத்தில்  கத்தோலிக்க பங்குகளில் பணியாற்றும்  அருட் பணியாளர்கள் , பொது நிலையினர் , பங்கு மக்கள் ,பக்தி சபையினர் என பலர் கலந்துகொண்டனர்