2018 ஆண்டுக்கான பிரதேச செயலக விளையாட்டு விழா


(லியோன்)

கிழக்குமாகாண விளையாட்டு திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் 2018 ஆண்டுக்கான விளையாட்டு விழா இன்று பிற்பகல் பிரதேச செயலாளர் கே .குணநாதன் தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது  .


மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் முதல் முறையாக    மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் கிராம சேவை பிரிவுளின் கிராம சேவை உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன்   நடத்தப்பட விளையாட்டு விழா நிகழ்வுகள் இன்று கோலாகலமாக மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது

மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம சேவை பிரிவுகளுக்கிடையில்  நடத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளில் முதல் இடத்தினை மட்டக்களப்பு கல்லடி கிராம சேவை பிரிவினரும் ,இரண்டாம் இடத்தினை மட்டக்களப்பு மாமாங்கம் கிராம சேவை பிரிவு பிரிவினரும்  வெற்றபெற்றுள்ளதுடன் இவர்களுக்கான பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது .   

இந்நிகழ்வில்  பிரதம விருந்தினராக  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த்  மற்றும் அதிதிகளாக மாநகர பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் ,உதவி பிரதேச செயலாளர் ஆர் .யோகராஜா ,,மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி .ஈஸ்வரன் ,பிரதேச செயலக ,நிர்வாக உத்தியோகத்தர் எஸ் .தில்லைநாதன் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர் .மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் , மண்முனை வடக்கு கிராம சேவை பிரிவுகளின் விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்துகொண்டனர் .