News Update :
Home » » இளமையில் வறுமையும் அதை எதிர்த்து போஷாக்கு உணவு வழங்குதலும்.

இளமையில் வறுமையும் அதை எதிர்த்து போஷாக்கு உணவு வழங்குதலும்.

Penulis : Unknown on Wednesday, March 28, 2018 | 5:26 PMகல்விஇன்று கிராமப்புறங்களில் வாழும் தமிழ் மக்களிடையே காணப்படும் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது. சாண் ஏற முழம் சறுக்கும் கதையாக இவ்வர்களுடைய கல்வி போஷாக்கு மட்டம் முன்னேற்றம் காணவில்லை பெற்றோரின் வேலையின்மை குறைந்த வருமானம் விழிப்புணர்வு இல்லாமை சமுகத்தின் குறைந்தளவான பங்களிப்பு போன்ற இன்னோரன்ன காரணங்களினால் எதிர்காலச் சந்ததிகள் இன்னும் பல வருடங்கள் ஏனைய சமுகத்துடன் ஒப்பிடும் பொழுது பின்னடைந்து சென்றுகொண்டு இருக்கின்றது.

இந்த நிலையினைக் கருத்தில் கொண்டு பல வேலைத்திட்டங்களை பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்புடன் மிகப்பின்தங்கிய பாலர்பாடசாலைகளை அடையாளங்கண்டு அவர்களுக்கான போஷாக்கான உணவு வழங்குதல் சேவை வழங்குனர்களை ஒருமுகப்படுத்துதல்இ விஷேடத்துவம் உள்ளவர்களைக்கொண்டு விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் போன்ற பல உதவிகளை கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்திச் சபையினர் நிக்கன் நெல்வி கௌண்டேஷனின் நிதி உதவியுடன் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மூன்றாவது பாலர் பாடசாலை மண்டூர் ஒல்லிமடுவால் கிராமத்தில் பாலர்பாடசாலை தெரிவு செய்யப்பட்டு அதற்கான போஷாக்கு உணவு வழங்கும் நிகழ்வு 25.03.2018 அன்று கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்திச் சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்திய அத்தியட்ஷகர் கு.சுகுணண்இ தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சில் உதவிப்பணிப்பாளராக உள்ள சி.தணிகசீலன்இ இக்கிராமத்துக்கான கிராமசேவை உத்தியோகத்தர் திரு.மயூரன்இ சமுகசேவைப் பிரிவின் பதவி நிலை உத்தியோகத்தர் திரு.மு.பேரின்பராசாஇ கி.அ.ச செயலாளர் திரு.திருக்குமரன் இச்சபையின் செயலாளர் ம.கலாவதிஇ  பாடசாலை ஆசிரியை தயாளினி செல்வக்குமார்இ கணேசபுரம் கி.அ.ச தலைவர் ஜெயரெட்ணம் ஆகியோருடன் திருமதி இன்பராணி அருள்ராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்து இவ்வைபவத்தினை சிறப்பாக ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது தலைவர் த.துஷ்யந்தன் உரையாற்றுகையில் எமது சபை ஏற்றத்தாழ்வுக்கு அப்பால் சென்று தேவையுடைய மக்களை அடையாளங்கண்டு பல்வேறு விதமான சேவைகளை ஆற்றி வருகின்றது. இச்சேவைகள் அனைத்தும் சமுக சிவில் அமைப்புக்கள்இ விளையாட்டுக்களகங்கள்இ கிரா அபிவிருத்திச் சங்கங்கள்இ நலன்விரும்பிகள் அத்துடன் அரச திணைக்கள அதிகாரிகள் ஆகியோர்களை ஒருங்கிணைத்த வண்ணம் நல்ல பல சேவைகளை மக்களிடையே செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதன் ஒரு கட்டமாக மண்டூர் பகுதியின் எல்லையில் அமைந்துள்ள ஒல்லிமடுக்கிராமத்தில் இந்த பாலர் பாடசாலைக் கிராமத்தில் போஷாக்கு உணவு வளங்கும் திட்டமானது நிக் அண்ட் நெல்லி பௌண்டேஷன் நிதியுதவியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக அமைய அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரு சமுகத்தின் எல்லா வித முன்னேற்றத்துக்கும் கல்வியே அடிப்படையாகும். கல்வி கற்றதனால்தான் நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடியுள்ளோம். அந்த வாய்ப்பினை நாம் நமது பிள்ளைகளுக்கு கொடுக்க தவறக்கூடாது. அந்தக் கல்வியினை பெறுவதற்கு நல்ல ஆரோக்கியம் தேவை அந்த ஆரோக்கியத்துக்கான அடிக்கல் இடும் பணியினையே இந்த சபையினர் நிக் அண்ட் நெல்லியுடன் இணைந்து போஷாக்கு உணவு வழங்கும் திட்டமாகச் செய்து சேவையாற்றி வருகின்றமை காலத்தின் தேவை அறிந்த செயலாகும் ஏன வைத்திய அத்தியட்ஷகர் கு.சுகுணண் பேசும் போது குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில்இ நம்மைச் சுற்றி நமக்கு தேவையான அத்தனை உணவுவகைகளும் உள்ளனஇ குறிப்பாக தானியவகைகள்இ மீன்வகைகள்இ நல்ல மரக்கறி வகைகள்இ மற்றும் பசும்பால் ஆகியவை கிடைக்கின்றன. அவைதான் நிறைவானவை அவற்றைவிடுத்து வெறும் வெளிக்கவர்சியில் மயங்கி நாம் பொதிசெய்த பாதுகாப்பற்ற போஷாக்கு குறைந்த உணவுவகைகளை உண்டு எம்மையே நாம் கெடுத்துக்கொள்ளுகின்றோம். அதற்கு மாறாக இந்த மாணவச் செல்வங்களுக்கு நல்ல எமது பகுதியில் இருந்து கிடைக்கும் தானியஇ பால்இ முட்டை போன்ற உணவுகளை இந்தக் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக இந்த திட்டத்தினை ஆரம்பித்து இருப்பது பாராட்டுக்குரியது.இதுபோன்று உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் குறிப்பிடுகையில் சிவில் அமைப்புக்கள்இ அரச திணைக்களங்கள் ஆகியவற்றை மக்களின் அபிவிருத்தியுடன் நேரடியாகத் தொடர்புபடுத்தவேண்டும். அதுதான் நீண்டு நிலைத்திருக்கும் ஒரு செயற்பாடாக இருக்கும் அல்லாது செய்பவை சிறிது காலத்தில் மறைந்துபோகும் இலக்கினை எட்டமுடியாதவையாகவே அமையும். அந்த வகையில் பல சாராரினையும் ஒன்றிணைத்து இந்தச் சேவை முன்னெடுக்கப்பட்டு வருவது எடுத்துக்காட்டாக உள்ளது. இதற்கு எமது புலத்தில் உள்ளவர்களின் தொடர்சியான கைகொடுப்பு எம்மை நெகிழச் செய்துள்ளது. எமது மக்களிடையே உறுதியான கல்விக்கான அடிக்கல்லினை பாலர் பாடசாலைகளில் இருந்தே ஆரம்பிக்கவேண்டும் என்ற அடிப்படைக் கோட்பாட்டுக்கிணங்கவே இந்த வேலைகளை இனங்கண்டும செய்து வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.அதன்பின் இந்த நிகழ்வுகள் உணவு வழங்கி வைத்து சபையின் செயலாளர் கலாவதி அவர்களின் நன்றியுரைடன் நிறைவுக்கு வந்தது.
Add caption

Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger