வகுப்பறைகள் உடைக்கப்பட்டு மாணவர்களின் சேமிப்பு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன


(லியோன்)


மட்டக்களப்பு அருணோதய வித்தியாலயத்தின் வகுப்பறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு மாணவர்களின் சேமிக்கப்பட்ட  பண உண்டியல்கள்  திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு அருணோதய வித்தியாலயத்தின் வகுப்பறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு  மாணவர்களினால்  வங்கியில் வைப்பிலிடுவதற்காக சேமித்து உண்டியல்களில்  வைக்கப்பட்டிருந்த  பணம் திருடப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபரினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .

இன்று காலை பாடசாலைக்கு வருகை தந்த  ஆசிரியர்களும் ,மாணவர்களும் வகுப்பறைக்கு சென்ற போது வகுப்பறைகளின் கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில்  வகுப்பறையில் உள்ள அலுமாரிகள் உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிடுந்த உண்டியல்கள் திருடப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் திருமதி .சுபாஷினி ரவிதேவன் தெரிவித்தார் .

திருடப்பட்ட உண்டியல்கள்  மாணவர்களின் வங்கி கணக்கில் வைப்பில்டுவதற்கு சேமிப்புக்காக வங்கியினால் வழங்கப்பட்டு மாணவர்களினால் சேமிக்கப்பட்ட பணம் இருந்தாகவும் , இன்று அதிகாலை வேளையிலே இனம் தெரியாத நபர்களினால்  வகுப்பறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக அதிபர் தெரிவித்தார் .

குறித்த விடயம்  தொடர்பாக பெற்றோர்கள்  தெரிவிக்கையில் பாடசாலையில் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையில் சுமார் 375 மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையாகும் , கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள்  செய்யப்பட்டிருந்த நிலையில்  மீண்டும் இவ்வாறான சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது . இந்த பாடசாலைக்கு பாதுகாப்பற்ற சுற்றுமதில்கள் , பாடசாலைக்கான  காவலாளி இல்லாத காரணத்தினாலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவித்தனர்

குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிசாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்