(லியோன்)
2018 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மத்தியஸ்த பேச்சுவார்த்தை , மோதலினைத் தவிப்பதன் மூலம் இன மற்றும் மத பதட்டங்களைக குறித்து கலந்துரையாடல்கள் மாவட்ட செயலாளர்கள் , ஒய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற அதிபர்கள் சகிதம் நடைபெற்ற கலந்துரையாடலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு அமைய மாவட்ட ரீதியில் செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

இதன்கீழ் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சரான ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் இனம் மற்றும் மதங்களுக்கிடையிலாக
நல்லிணக்கத்தையும் ,புரிந்துணர்வையும் ,சமாதான சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்காக
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்க குழு தொடர்பான
கலந்துரையாடலும் , மாவட்டத்திற்கான நல்லிணக்க ஒருமைப்பாட்டுக்கான செயலாளர்கள் தெரிவும்
மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார்
தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்களுக்கிடையில்
சமாதானத்தை ஏற்படுத்தும் நல்லிணக்க ஒருமைப்பாட்டுக்கான
இரண்டு செயலாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்
.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க
அதிபர் திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந்த். உதவி மாவட்ட செயலாளர் எ . நவேஸ்வரன், மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் டப்ளியு . ஜெ . ஜாகொட ஆராச்சி ,மாவட்ட 14 பிரதேச செயலகங்களின் பிரதேச
செயலாளர்கள் , முப்படையினர் , மதத்தலைவர்கள் , சிவில அமைப்புக்களின் பிரதிநிதிகள்
,அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்