கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு ஆப்படித்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினை கலைத்துவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிழக்கு மாகாண ஆளுனருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று காலை மட்டக்களப்புக்கு வருகைதந்த ஜனாதிபதியுடம் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மஜர் ஒன்றை கையளித்தனர்.
அந்த மகஜரில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினை கடுமையாக சாடிய பட்டதாரிகள் தம்மை ஏளனம் செய்யும் நடவடிக்கையினை பொதுச்சேவை ஆணைக்குழுவில் உள்ளோர் மேற்கொண்டதாகவும் தமது பிரச்சினைகளை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லையென தெரிவித்திருந்ததுடன் தமது பிரச்சினைகளையும் தெரிவித்திருந்தனர்.

அதனைப்பெற்றுக்கொண்ட ஜனாதிபதி மேடையில் அந்த மகஜரை பொறுமையாக வாசித்ததுடன் இறுதியில் தனது உரையின்போது கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு கடுமையான தோணியில் ஜனாதிபதி உரையாற்றினார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி,

நான் இங்கு வந்தபோது மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் எனக்கு ஒரு கடிதம் தந்தனர்.கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுடன் அவர்கள் நடாத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுச்சேவை ஆணைக்குழுவினை சேர்ந்தவர்கள் பட்டதாரிகளுக்கு கூறிய பல கருத்துத்துகளை அதில் அவர்கள் கூறியிருந்தனர்.பொதுச்சேவை ஆணைக்குழு கூறிய கருத்துகள் அவர்களுக்குரிய கருத்துகள் அல்ல.பொதுச்சேவை ஆணைக்குழு பாரிய தவிறினை புரிந்துள்ளார்கள்.

மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு இவ்வாறான கருத்துகளை தெரிவிப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை.இவ்வாறான பேச்சுவார்தையினை நடாத்தியது கூட தவறான விடயமாகும்.குறித்த பட்டதாரிகளின் பிரச்சினையை மாகாண ஆளுனர் அல்லாதுவிட்டால் குறித்த அமைச்சின் கவனத்திற்கு பொதுச்சேவை ஆணைக்குழு கொண்டுசென்றிருக்கவேண்டும்.குறித்த கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினை கலைத்துவிடுமாறு ஆளுனருக்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன்.

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவில் தொடர்ந்து 14வருடங்கள் கடமையாற்றியவர்களும் உள்ளதாக நான் அறிகின்றேன்.ஆணைக்குழு நியமனங்கள் மூன்று அல்லது ஐந்து வருடங்களில் மாற்றப்படவேண்டும்.இது தொடர்பில் விசேட கவனத்தினை ஆளுனரிடம் தெரிவித்திருக்கின்றேன்.என தெரிவித்தார்.