கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு


(லியோன்)


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிந்தனைக்கு அமைய கிழக்குமாகாணத்தில் ஆசிரியர்களாக  சேவையாற்ற வழங்கப்படவுள்ள இரண்டாவது படிமுறைக்கான  நியமனங்கள் வழங்கும் நிகழ்வு கிழக்குமாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம தலைமையில் மட்டக்களப்பு
  வெபர் மைதானத்தில் நடைபெற்றது  .


இந்நிகழவில் டிப்ளோமா தாரிகளுக்கும், பட்டதாரிகளுக்குமான  242 ஆசிரியர் நியமன கடிதங்கள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டது

இதேவேளை கிழக்கு கிழக்குமாகாணத்தில் உள்ள  322 பாடசாலைகளுக்கு நடமாடும் விஞ்ஞான ஆய்வு கூட உபகரணங்களும் விஞ்ஞான  ஆசிரியர்களுக்கான நியமனங்களும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில்  இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம உட்பட மாகாண முன்னாள் அமைச்சர்கள், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், சமயப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்தின் போது, மட்டக்களப்பில் வரலாற்று சிறப்புமிக்க அமிர்தகழி  ஸ்ரீ மாமங்கேஸ்வரர்  ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாட்டிலும் கலந்துகொண்டார்