பாலமீன்மடுவில் இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் புதிய சுற்றுலா விடுதி திறந்துவைப்பு

மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் புதிய சுற்றுலா விடுதி நேற்று வியாழக்கிழமை (29-03)திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சுமார் 20 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளையும் கொண்டதாக இந்த சுற்றுலா விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தினை நோக்கி அண்மைக்காலமாக சுற்றுலாப்பயணிகள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றினை எதிர்கொள்ளும் வகையில் இந்த சுற்றுலா விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

பத்துக்கு மேற்பட்ட அறைகளைக்கொண்டதாக சகல வசதிகளையும் கொண்டதாகவும் இயற்கை எழில் கொண்ட பகுதியாகவும் இது அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் திலக் தர்மரட்ன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி உட்பட அமைச்சின் செயலாளர்கள்,அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை பயன்படுத்தி சில சக்திகள் இந்த நாட்டு மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்த முனைவதாகவும் அவர் தெரிவித்தார்.