கிரான்குளம் திருமுருகன் புகழ்பாடும் வேல்நாதம் இறுவெட்டு வெளியீடு

மட்டக்களப்பு,கிரான்குளம் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் ஆலயம் தொடர்பில் பாடப்பட்டுள்ள வேல்நாதம் பக்திப்பாடல் இறுவெட்டு நிகழ்வு இன்று நடைபெற்றது.

கிரான்குளம் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் ஆலயத்தில் ஆலயத்தின் தலைவர் அ.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எஸ்.அமலநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

நிகழ்வில் ஆன்மீக அதிதியாக ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ செ.கு.சுப்ரமணிய குருக்கள் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக போரதீவுப்பற்று உதவி பிரதேச செயலாளர் சி.புவனேந்திரன்,கிழக்கு மாகாண ஆளுனர் செயலக உதவி செயலாளர் உ.சிவராசா,மண்முனைப்பற்று பிரதேசசபையின் செயலாளர்ந.கிருஸ்ணபிள்ளை,கல்குடா வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் ச.தட்சணாமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிரான்குளம் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் ஆலயத்தின் புகழைப்பாடும் இறுவெட்டாக வெளியிடப்பட்டுள்ள இந்த இறுவெட்டினை ஆலயத்தின் திருப்பணிச்சபை வெளியிட்டுள்ளதுடன் பிரசித்த நொத்தாரிசும் சமாதான நீதவானுமான பெ.சிவசுந்தரம் தயாரித்துள்ளார்.

இந்த இறுவெட்டுக்கான பாடலை கிரான்குளத்தினை சேர்ந்த இளம் கலைஞரும் கவிஞருமான ஜீவானந்தம் எழில்வண்ணன் எழுதியுள்ளதுடன் கொழும்பினை சேர்ந்த வி.செந்தூரன் இசையமைத்துள்ளார்.

இந்த வெளியீட்டு நிகழ்வில் முதல் இறுவெட்டினை தொழிலதிபர் கா.செந்தில்குமார் பெற்றுஇறுவெட்டு வெளியீட்டை ஆரம்பித்துவைத்தார்.

இறுவெட்டு தொடர்பான நயவுரையினை கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீட சிரேஸ்ட விரிவுரையாளர் க.மோனதாஸ் மேற்கொண்டதுடன் ஏற்புரையினை பாடலாசிரியர் ஜீவானந்தம் எழில்வண்ணன் நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் கிராம முக்கிஸ்தர்கள், எழுத்தளர்கள், கலைஞர்கள், பக்தர்கள்,சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துசிறப்பித்தனர்.