(லியோன்)
மட்டக்களப்பு மாநகர சபை உள்ளூராட்சி சபைகளுக்கு
தெரிவான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இன்று
மட்டக்களப்பில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மாவட்டத்தின்
மட்டக்களப்பு மாநகர சபை , மண்முனை பற்று பிரதேச சபை , மண்முனை மேற்கு பிரதேச சபை
மற்றும் பட்டிருப்பு தொகுதி பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய
தேசிய கட்சி உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இன்று மட்டக்களப்பு கோப் இன்
விடுதியில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியகட்சியின் இணைப்பாளர் எம் ஜெகவண்ணன் ஒழுங்கமைப்பில்
முன்னாள் பிரதி அமைச்சரும் , ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி
அமைப்பாளருமான எஸ் .கணேசமூர்த்தி தலைமையில் சட்டத்தரணி அ. மகாலிங்கம் சிவம் முன்னிலையில் உறுப்பினர்களின் சத்திய பிரமாண
நிகழ்வு நடைபெற்றது
இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட முகாமையாளர் வி .கே .
லிங்கராஜா , தபால் சேவைகள் , முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் கிழக்குமாகாண
இணைப்பாளர் எச் எம் .முஸ்தபா , மாவட்ட சட்ட ஆலோசகர் கே
.ஸ்ரீகுமார் மற்றும் மாநகர சபை , பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள்
கலந்துகொண்டனர்