தேசிய அணிக்கான வீரர்கள் தெரிவு பயிற்சி பட்டறையின் இறுதி நிகழ்வு


(லியோன்)

இலங்கை கால் பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் தேசிய அணிக்கான வீரர்கள் தெரிவு  பயிற்சி பட்டறையின் இறுதி நிகழ்வு (23) மட்டக்களப்பில் நடைபெற்றது


இலங்கையின் 82 வருட வரலாற்றில் முதல் முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தேசிய கால்பந்தாட்ட அணிக்கான  வீரர்கள் தெரிவு செய்யும் பயிற்சி பட்டறையின் இறுதி நிகழ்வுகள் இன்று  மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறுகின்றன .

மட்டக்களப்பு ,அம்பாறை , திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் பதிவு செய்யப்பட 10 கால்பந்தாட்ட சம்மேளன சங்கங்களில் இருந்து தேசிய அணிக்கு வீரர்களை தெரிவு செய்யும் பயிற்சி பட்டறையாக நடைபெறுகின்றது

இந்த பயிற்சி பட்டறை  21.03.2018  முதல்  இன்று வரை  வரை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது .

இந்த பயிற்சி பட்டறையில் தெரிவு செய்யப்படும் வீரர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் பங்களதேஸ் நாட்டில் நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் கலந்துகொள்ளவுள்ளனர் .

இந்த வீரர்களை தெரிவு செய்யும் இறுதி நாள் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் , மாநகர பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் , மட்டக்களப்பு கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் வி .லவக்குமார் , மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி .ஈஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளன செயலாளர் டி .காந்தன்  ,இலங்கை கால் பந்தாட்ட சங்கத்தின் பிரதம முகாமையாளர் சுனில் செனவீர , இலங்கை கால்பந்தாட்ட சங்க  உப தலைவர் என் .டி . பாருக் , இலங்கை கால்பந்தாட்ட  சங்க பயிற்றுவிப்பாளர்களான பக்கிர் அலி , சுசுக்கி , குகி , பாசித் , கோல் காப்பாளர் பயிற்றுவிப்பாளர்  சம்பத் பண்டார ஆகியோர் பயிற்றுவிப்பாளர்களாக கலந்துகொண்டனர்