அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்த குளம் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்


 (லியோன்)

கிழக்குமாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகமவின் பணிப்புரைக்கு அமைய கிழக்குமாகாண முதலமைச்சின் செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்த குளம் புனரமைப்பு செய்யும் பணிகள் இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெற்றது .


ஆலய பிரதம குரு சிவஸ்ரீ  சௌந்தராஜன் குருக்களின் விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட புனரமைப்பு நிகழ்வில் கிழக்குமாகாண  ஆளுநரின் செயலாளர் ஜே எஸ் டி எம்  அசங்க அபேவர்த்தன, கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே . கருணாகரன் ,கிழக்கு மாகாண முதல் அமைச்சின் செயலாளர் யு .எல் .எ . அசிஸ் ,அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எ .டி .எம் .டாபிக் ,, மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் ஆர் .வடிவேல் , ஆலய வண்ணக்கர்மார்கள் , ஆலய நிர்வாக  சபை உறுப்பினர்கள் ,  என பலர் கலந்துகொண்டனர்

இதேவேளை கிழக்குமாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகமவின் பணிப்புரைக்கு அமைய மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதி இருவழி பாதையாக அமைக்கப்படவுள்ளது