மட்டக்களப்பின் இளைஞர்களின் முயற்சியினால் ஆனந்தசுதாகரனுக்கு தீர்வு

மட்டக்களப்பு இளைஞர்களின் முயற்சியின் காரணமாக தமிழ் அரசியல் கைதிகளின் பிள்ளைகள் இன்று ஜனாதிபதியை சந்தித்து தமது கோரிக்கையினை தெரிவித்ததுடன் கிழக்கில் பெறப்பட்ட கையெழுத்தும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி முதன்முறையாக மட்டக்களப்பு இளைஞர்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதிக்கான கருணைமனுவுக்கான கையெழுத்துப்பெறும் போராட்டம் கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் பெறப்பட்ட 58ஆயிரம் கையொப்பம் அடங்கிய மனு இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன் குறித்த தமிழ் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரன் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலைசெய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரும் மற்றும் மட்டக்களப்பில் இருந்து சென்ற இளைஞர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது குறித்த அரசியல் கைதியின் விடுதலை தொடர்பில் விரைவான நடவடிக்கையெடுப்பதாகவும் இதன்போது உறுதியளித்தார்.

ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பு மட்டக்களப்பு இளைஞர்கள் மேற்கொண்ட முழு முயற்சி காரணமாகவே நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.