மட்டக்களப்பு மாவட்ட இளம்பராயத்தினருக்கு வரப்பிரசாதம் அக்றிவ் லேர்னிங் சென்றர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக திறனை விருத்திசெய்யும் வகையில் அக்றிவ் லேர்னிங் சென்றர் மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் வளர்ந்தவர்கள் வரையில் தங்களது மொழி மற்றும் திறன்களை விருத்திசெய்யும் வகையில் இந்த நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு,கல்லடி சரவணா வீதியில் இந்த நிலையம் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

அக்றிவ் லேர்னிங் சென்றரின் பணிப்பாளர் செல்வி ரேகாகாமிலா இராதகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு வெளிநாட்டு வளவாளர்களின் பங்குபற்றலுடன் ஆங்கிலம் உட்பட தொழில் கல்வி என பல்வேறு தரப்பட்ட ஆளுகையினை வெளிக்கொணரும் வகையில் இந்த நிலையம் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக நவீன வலயமைப்புடன் கொண்ட நூலகத்தினைக்கொண்டுள்ள இந்த நிலையத்தில் 06வயது தொடக்கம் ஆங்கிலக்கல்வியும் தொழில்சார்ந்த பயிற்சி கல்வியும் வழங்கப்படவுள்ளதாக நிலையத்தின் பணிப்பாளர் செல்வி ரேகாகாமிலா இராதகிருஸ்ணன் தெரிவித்தார்.

நவீன கற்பித்தல் முறையுடன் புதிய கற்பித்தில் செயற்பாடுகளைக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் சுய தொழிலில் ஈடுபடவுள்ளோருக்கான வழிகாட்டல் செயற்பாடுகளும் இந்த நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.