மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் சமூக மேம்பாட்டு மையம் நடாத்திய மாபெரும் விருதளிப்பு விழா - 2018

(Ks Saran)

இந்நிகழ்வானது 03.03.2018 சனிக்கிழமை பி.ப. 2.45 மட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மண்டபத்தில் குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் சமூக மேம்பாட்டு மையத் தலைவர் க.ஞானரெத்தினம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக .எம்.உதயகுமார் அரசாங்க அதிபர், மாவட்டச் செயளாளர்  கலந்து சிறப்பித்தார். ஆத்மீக அதிதியாக ஸ்ரீமத் சுவாமி பிரபு பிறேமானந்தா ஜீ மகராஜ் பொறுப்பாளர், இராமகிருஸ்ணமடம், கல்லடி சிறப்பு அதிதிகளாக .எம்.கே. பேரின்பராஜா, சிரேஸ்ட சட்டத்தரணி , பதில் நீதவான்  மற்றும் ஆர்.சுகிர்தராஜன்  வலயக்கல்விப் பணிப்பாளர், பட்டிருப்புக் கல்வி வலயம் அத்துடன் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் மேலதிக பணிப்பாளர் நாயகம், திறைசேரி, நிதி அமைச்சு என்போர் கலந்து சிறப்பித்தனர்.


மங்கல விளக்கேற்றல் இறைவணக்கத்துடன் நிகழ்வு இனிதே ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆத்மீக அதிதியால் ஆசியுரை வழங்கப்பட்டது. பின்னர் குருக்கள்மடம் ஸ்ரீ கிருஸ்ணன் கோயில் சமூகமேம்பாட்டு மையத் தலைவர் க.ஞானரெத்தினம் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. அடுத்ததாக முதலாவது கட்டமாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த எமது பிரதேச மாணவர்கள் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இதனை ஆர்.சுகிர்தராஜன் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் வழங்கி வைத்தார். அத்துடன் க.பொ.த. சா.த பரீட்சையில் 9 சித்தி பெற்றவர்கள் கொளரவிக்கப்பட்டனர். அடுத்ததாக பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் கொளரவிக்கப்பட்டனர். இதனை எம்.கே.பேரின்பராஜா J.P.U.M நிகழ்திவைத்தார். அதனைத் தொடர்ந்து தரம் 5 புலமைப் பரீசில் க.பொ.த. உ.த பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மட்டக்களப்பு, பட்டிருப்பு வலயங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாராட்டப்பட்டனர். இதனை கலாநிதி.எம்.கோபாலரெத்தினம், மேலதிக பணிப்பாளர் நாயகம்  வழங்கிவைத்தார். அடுத்து தேசிய மட்டச் சாதனை படைத்த மட் /களுதாவளை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் ஜெ. ரிசானன் கௌரவிக்கப்பட்டார் அடுத்து தேசிய மட்ட கபடிப் போட்டியில் முதலாம் இடம் பெற்ற மாணவர்களும் பாராட்டி கொளரிக்கப்பட்னனர். அடுத்து கே. வடிவேல், ஆத்மீகத் துறை, பி.லோசிதரன், ஊடகத் துறை, திரு.எஸ் வினோஜ்குமார், கண்டுபிடிப்பு ஆகியவர்களும் கௌரவிக்கப்பட்டனர். அதிவிசேட கௌரவிப்பாக டாக்கடர் வி.விவேகானந்தராஜா, வேந்தர் கிழக்குப் பல்கலைக்கழகம், பேராசிரிசியர் எஸ். திருக்கணேஸ், கிழக்குப் பல்கலைக்கழகம், தேசகீர்த்தி எம்.திருநாவுக்கரசு, இலக்கியம் போன்றோர் கௌரவிக்கப்பட்டனர். இவர்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்உதயகுமார்  வழங்கிவைத்தார். இந்நிழ்வுகளை தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் சா.துவாரகன் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்