மட்டக்களப்பில் 154வது பொலிஸ் தினம் அனுஸ்டிப்பு

சட்டம் ஒழுங்கை பேணுவதற்கான நடவடிக்கையில் இதுவரையில் 3118 பொலிஸார் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளதாக கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர தெரிவித்தார்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154பொலிஸ் வீரர்கள் தினம் இன்று புதன்கிழமை காலை நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

கிழக்கு பிராந்தியத்தின் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் முன்பாக அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபி அருகில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜயக்கொட ஆராய்ச்சி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர கலந்துகொண்டார்.

இதன்போது பொலிஸ் கொடியேற்றப்பட்டு நினைவுகீதம் ஒலிக்கச்செய்யப்பட்டதுடன் உயிரிழந்த பொலிஸாருக்கு இரண்டு நிமிட மௌ அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் மெண்டிஸ் உட்பட 11பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள்,உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள்,உயிரிழந்த பொலிஸாரின் உறவினர்கள்,பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.