மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வு


(லியோன்)

70ஆவது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் நிலவுகின்ற இரத்தத் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில்  மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது


மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமாரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட  இந்த இரத்ததான முகாமில் கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள பிரதான இரத்த வங்கியின் பணிப்பாளர் டாக்டர் ருக்சான் பெல்லன , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் இப்ரா லெப்பை , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி  சுதர்ஷனி ஸ்ரீகாந்த் ,மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா  அதிபர் W J .  ஜாகொட ஆராய்ச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யடவர ஆகியோர் ,கலந்துகொண்டார் .

இந்நிகழ்வில் உரையாறிய மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில்  மாவட்டத்தில் அதிகரித்துள்ள விபத்துக்கள், மட்டக்களப்பு புற்றுநோய் பிரிவின் இயக்கம் என இரத்தத்திற்கான தேவைகள் அதிகரித்துள்ள நிலையில் மட்டக்களப்பு இரத்த வங்கியில் இரத்தத்துக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது

இந்த நிலையில் உயிரைப் பாதுகாக்க உதவும் இரத்ததானத்தினை செய்வதற்கு பின்நிற்கின்ற மனோபாவமும் முன்வராமையும் காணப்படுகிறது. இரத்தம் வழங்குவதனால் உடலுக்குப்பிரச்சினைகள் ஏற்படும் என்ற தவறான எண்ணப்பாடு மாற்றமடைய வேண்டும்.

மட்டக்களப்பு இரத்த வங்கியானது சகல வசதிகளுடனும் இயங்கி வருகின்ற போதும் இரத்தம் வழங்குபவர்கள் போதாமை காரணமாக தட்டுப்பட்டை எதிர் கொண்டு வருகிறது.

இந்த இரத்ததான  முகாமில் பங்குகொண்டு மாவட்டத்தின் இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான தேசிய பணிக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்களை ஒத்துழைக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்

இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெறுகின்ற இரத்ததான நிகழ்வில் மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், முப்படையினர், பிரதேச விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள்,  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் ,தாதிய உத்தியோகத்தர்கள் எனப் பொருந்தொகையானோர்   நிகழ்வில் கலந்துகொண்டனர்