மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி


 (லியோன்)

மட்டக்களப்பு  கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு மாமாங்கம் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின்   2018 ஆம் ஆண்டுக்கான  திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று பிற்பகல்  பாடசாலை மைதானத்தில் அதிபர்  வி .முருகதாஸ் தலைமையில்  நடைபெற்றது


ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர்,

அதனை தொடர்ந்து  தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன்  மாணவர்களின் இல்ல அணிவகுப்பு இடம்பெற்றது.

விளையாட்டு நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இடம்பெற்றது .

விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்களின் ஓட்டப்போட்டி, மாணவர்களின்  மற்றும் பழைய மாணவர்கள் , பெற்றோர்கள்,ஆசிரியர்கள் ஆகியோரின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது,
பாடசாலையின் 2018 ஆம் ஆண்டு இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வாக  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது..

இந்த விளையாட்டு போட்டி  நிகழ்வில்   விருந்தினர்களாக  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே குணநாதன் ,மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் கே ,அருள்பிரகாசம் ,பாடசாலை அபிவிருத்தி குழு கணக்காய்வாளர் எம் .உதயராஜ் , கிராம சேவை உத்தியோகத்தர் அன்டன் ஜெபஸ்  மற்றும்   நிகழ்வில்  பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் ,பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்