புனித மிக்கேல் கல்லூரியின் 2018 திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி


 (லியோன்)

மட்டக்களப்பு  கல்வி  வலயத்திற்குட்பட்ட   மட்டக்களப்பு புனித மிக்கேல்  கல்லூரியின் 2018 ஆண்டுக்கான  மெய்வல்லுனர்  திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி   இன்று பிற்பகல் மட்டக்களப்பு வெபர்  மைதானத்தில்  நடைபெற்றது.


கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா   தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விருந்தினர்களாக  கிழக்குமாகாண  ஆளுநர் ரோகித்த போகொல்லாகம ,பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா , மட்டக்களப்பு கல்லடி  23ஆம் படை இராணுவ தலைமையக அதிகாரி பிறேகிடியர் என் .டி எஸ் .பி . நியுன் ஹெல்ல ,மட்டக்களப்பு  வலயக் கல்விப்பணிப்பாளர் கே பாஸ்கரன் , மன்முனை வடக்கு  கோட்டக்கல்வி பணிப்பாளர்  கே .அருள்பிரகாசம், உதவிக் கல்விப் பணிப்பாளர் உடற்கல்வி வி .லவக்குமார்,  மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யடவர  .  மட்டக்களப்பு  பொலிஸ்  நிலைய   பொறுப்பதிகாரி   எம் .எம் .ஜி .டி. தீ காஹா வதுற  உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர் .

ஆரம்ப  நிகழ்வாக   கல்லூரி  மாணவர்களால் அதிதிகளுக்கு  மாலை  அணிவித்து அழைத்து வரப்பட்டனர்அதனை தொடர்ந்து  தேசிய கொடி,   கல்லூரி கொடி  ,விளையாட்டுக்கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது       

இதனை தொடர்ந்து மாணவர்களின் கல்லூரி கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது .
இதனை தொடர்ந்து இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர்     ஏற்றப்பட்டுமாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வுகள்      விளையாட்டு  ஆரம்பமானது

விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்களின் ஓட்டப்போட்டிமாணவர்களின்  உடற்பயிற்சி  பயிற்சிபெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆகியோரின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும்  நடைபெற்றது .

கல்லூரி இல்ல விளையாட்டு போட்டியின்  இறுதி நிகழ்வாக  வெற்றி பெற்ற   இல்லமாணவர்களுக்கு  பரிசில்களும் சான்றிதழ்களும்,வழங்கப்பட்டு விளையாட்டு  நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள் , அருட்தந்தையர்கள் ,மாணவர்கள் , பெற்றோர்கள் , கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , கல்லூரி பழைய மாணவர்கள் என பலர்  கலந்துகொண்டனர்