மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

மண்ணுக்காக சகோதரர்களை இழந்தவர்கள் நாங்கள் -தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மகளிர் அணி தலைவி

தமிழர்களின் மண்ணைக்காக்கவும் உரிமைக்காகவும் எனது இரண்டு சகோதரர்களையும் சகோதரியையும் மாவீரர்களாக்கிய குடும்பம் எனது குடும்பம்.இந்த மண்ணைக்காக்க நான் உயிரை இழக்கவும் தயங்கமாட்டேன் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை வேட்பாளருமான திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையிலான மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பு கல்லடி,உப்போடையில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை வேட்பாளருமான திருமதி செல்வி மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த பரப்புரைக்கூட்டத்தில் கட்சி ஆதரவாளர்கள்,வேட்பாளர்கள் என பெருமளவானோர் கலந்துகெர்ணடனர்.

கடந்த காலத்தில் கல்லடி பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளுக்கான தான் போராடியபோது ஒதுங்கி நின்று வேடிக்கைபார்த்தவர்கள் இன்று தேசியம் கதைத்து வாக்கு கேட்டுவருவதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை வேட்பாளருமான திருமதி செல்வி மனோகர் இங்கு தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு சேவைசெய்யவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு அதற்கு நான் வெற்றிபெறவேண்டும்.நான் வெற்றிபெறா விட்டாலும் என் உயிர் இருக்குமு; வரையில் மக்களு;காக நான் சேவையாற்றுவேன் என இங்கு தெரிவித்தார்.