கலைக்கோட்டனின் "அமேசன் காட்டில் அழகன் பூசாரி " , "உணர்வுகள் " இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்வு


 (லியோன்)

கலைக்கோட்டன் அ. இருதயநாதன் எழுதி தேசிய ரீதியில் கொடகே விருது பெற்ற  “அமேசன் காட்டில் அழகன் பூசாரி” , (சிறுகதை தொகுதி ) கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மூலமாக முதல் தெரிவாகி வித்தகன் விருது பெற்ற “உணர்வுகள்” (நாடகத்தொகுதி) ஆகிய நூல்கள் வெளியீட்டு  நிகழ்வு  மட்டக்களப்பு மகாஜன கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .


கிழக்கு மாகாணப் கலைப்பெருமை அதன் உயர்வு ,வளர்ச்சி  இவைகளுக்கு முன்னுரிமை வழங்கி கலைப்பணி செய்து கொண்டு அன்றும் இன்றும் கலைக்காக தம்மை அர்பணித்து வாழும் கலைக்கோட்டனின் உணர்வுகள் என்னும் மகுடமிடபட்ட நாடகத் தொகுதி ,கலை இலக்கியத்தில்  நாட்டுக்கூத்து , மேடைநாடகம் தொலைக்காட்சி நாடகம் ,அம்மானை கவிதை ,சிறுகதை ஆகியவற்றின் இவரது  பல்துறை ஆளுமை எழுத்துருவாக்கம் மட்டக்களப்பின் கலை வளங்களுக்குள் “உணர்வுகள்” நாடகத்தொகுதியும்  மற்றும்  “அமேசன் காட்டில் அழகன் பூசாரி” ,சிறுகதை தொகுதியும்   பாராட்டுப்பெறும் நூல்களாக இன்று வெளியிடப்பட்டது

கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்தந்தை எ .எ . நவரெட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக  மாவட்ட அசாங்க அதிபர் எம் .உதயகுமார் , சிறப்பு அதிதிகளாக  மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் , தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய பங்கு தந்தை ரமேஸ் கிறிஸ்டி, பேராசிரியர் எஸ் .மௌனகுரு , மற்றும் இலக்கிய வாதிகள், எழுத்தாளர்கள் , கலைஞர்கள் என பலர் .கலந்துகொண்டனர்