சர்வதேச தரத்திலான கிரிகெட் மைதானம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வு


(லியோன்)

மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிகெட் மைதானம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது


மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டு கழக அனுசரணையில் புலம் பெயர்ந்து வாழும் கோட்டமுனை விளையாட்டு கழக உறுப்பினர்களின் உதவியுடன் மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் சுமார் 10 ஏக்கர் நிலபரப்பில் சர்வதேச தரத்திலான கடின பந்து கிரிகெட் மைதானம் அமைப்பது தொடர்பாக  ஒப்பந்தம் கைசாத்திடும்  நிகழ்வு இன்று பிற்பகல் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் நடைபெற்றது .   

மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டு கழக தலைவர் பி .சடாச்சர  ராஜா  தலைமையில் நடைபெற்ற ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வில் இலங்கை கிரிகெட் சங்க  முன்னாள் தலைவர் பந்துல வர்ணகுலசூரிய , இலங்கை கிரிகெட் அணியின்  முன்னாள் கிரிகெட் வீரர் உபுல் சந்தன ,  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் . மட்டக்களப்பு மாவட்ட கிரிகெட் சங்க தலைவர் .ரஞ்சன் , மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே .பாஸ்கரன் , மற்றும் கோட்டமுனை விளையாட்டு கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

மட்டக்களப்பு மாவட்ட  மட்டத்தில் சிறந்த கிரிகெட் வீரர்களை உருவாக்கி அவர்களின் விளையாட்டு திறன்களை விருத்தி செய்து அவர்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்காக மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டு கழகம் கிழக்கு மாகாணத்தில் சர்வதேச தரத்தில் கிரிகெட் மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது