Breaking News

திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி.

(சசி துறையூர்)
மட்/ திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுணர் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று பாடசாலை அதிபர் திரு.எஸ்.தருமசீலன் தலைமையில் பாடாசாலை மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, நிகழ்வை சிறப்பித்ததுடன், மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

இந் நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் , கோட்டக்கல்வி பணிப்பாளர், ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்ததுடன்.

மாணவர்களின் பொற்றோர் , பழைய மாணவர்கள் என பொது மக்கள் பெருமளவில் பார்வையாளர்களாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.









No comments