கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளின் பிரச்சினைக்கான தீர்வு விரைவில்..



கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பிலும் நாம் கவனஞ்செலுத்தி வருகின்றோம்.ஜனாதிபதி தெருவிப்பு

 மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேசத்திற்கு   கடந்த (21.01.2018) ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு வருகை தந்த  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை வேலையற்ற பட்டதாரிகள் சந்தித்து தங்கள் நியமனம் சம்பந்தமாக கலந்துரையாடினர். இதற்கான சந்தர்ப்பத்தை  கற்குடா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.

அதன் பிரகாரம் இந் நிகழ்வில் வேலையற்ற பட்டதாரிகளது பிரதிநிதி உரையாற்றும் வாய்ப்பும், நாம் மகஜர் கையளித்து எமது பிரச்சனையை ஜனாதிபதியுடன் நேரடியாக தெளிவுபடுத்தும் சந்தர்ப்பமும் கிட்டியது.

தங்களது பிரச்சனையை நேரடியாக ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தியபோது அவர் தனது உரையில் கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பிலும் நாம் கவனஞ்செலுத்தி வருகின்றோம் என கூறியமை விஷேட அம்சமாகும்.

மேலும்
பிரச்சனைகளை செவிமெடுத்து வேலையற்ற பட்டதாரிகள் சார்ந்து முன்வைக்கப்பட்ட இரண்டு கோரிக்கைகளுக்கும்  பதிலை வழங்கினார்.

01. கிழக்கு மாகாணத்திலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நிதி அனுமதியை பெற்று கொடுக்க  அன்றிரவே கிழக்கு மாகாண ஆளுனருடன் தொலைபேசியில் உரையாடுவதாகவும்.

02.மத்திய அரசால் வழங்கப்படவுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை தேர்தல் முடிவடைந்த பின்னர்  வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

எனவே தமிழ் அரசியல்வாதிகளுக்கு தமது பிரச்சனை சம்பந்தமாக பல தடவைகள் தெளிவுபடுத்தியும் ஆக்க பூர்வமான நடவடிக்கைள் எதுவும் மேற்கொள்ளாத நிலையில்    தம்மீது அக்கறை கொண்ட ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்களால் இதற்கான சமிக்ஞைகள்  ஏற்படுத்தி தந்தமை வரவேற்கத்தக்க விடயமாகும்.