சின்னவத்தையில் சோழன் சிலை திறந்துவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான சின்னவத்தை பகுதியில் தமிழ்-சிங்கள மக்களிடையே நல்லுறவினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் வகையில் சோழர் மன்னனில் சிலையொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை எல்லைக்கிராமத்தில் இந்த சிலை திறந்துவைக்கப்பட்டது.

சின்னவத்தை நாம் தமிழர் கலைகலாசார பண்பாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டிலும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் இளைஞர் அணியின் நிதியொதுக்கீட்டிலும் இந்த சிலை திறந்துவைக்கப்பட்டது.

நாம் தமிழர் கலைகலாசார பண்பாட்டுக்கழகத்தின் தலைவர் கோ.பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பி.பிரசாந்தன் கலந்துகொண்டார்.

சின்னத்தை பகுதியில் இருந்து காணாமல்போன 33 இளைஞர்களின் ஞாபகார்த்தமாகவும் கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து இரண்டு இனங்களும் நல்லுறவினை வளர்த்துக்கொள்ளும் வகையிலும் இந்த சிலை திறந்துவைக்கப்பட்டதாக நாம் தமிழர் கலைகலாசார பண்பாட்டுக்கழகத்தின் தலைவர் கோ.பிரசாத் தெரிவித்தார்.