இராணுவத்தினர் பங்கேற்புடன் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் நிகழ்வு

தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையாகவுள்ள தைத்திருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் விசேட வழிபாடுகளும் பொங்கல் நிகழ்வுகளும் நடைபெற்றன.

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை தைத்திருநாள் விசேட”ஜை வழிபாடுகள் நடைபெற்றன.

ஆலய முன்றிலில் பொங்கல் படைக்கப்பட்டு சூரியபகவானுக்கு விசேட விசேட”ஜை வழிபாடுகள் நடைபெற்றன.

கிழக்கு மாகாண இராணுவத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த விசேட விசேட”ஜை வழிபாடுகள் நடைபெற்றன.

விசேட”ஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆலய முன்றிலில் இராணுவத்தினரின் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

இனங்களிடையே நல்லுறவினையும் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் உறவினை ஏற்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக்க பனேவல உட்பட கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் கட்டளை அதிகாரிகள்,ஆலயத்தின் வண்ணக்கர்கள்,இராணுவ உயர் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.