புனித சிசிலியா பெண்கள் கல்லூரி மாணவர்களின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

(லியோன்)

தேசிய டெங்கு ஒழிப்பு மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  - கல்வி  அமைச்சு மற்றும் ஜனாதிபதி டெங்கு  ஒழிப்பு பணிப்பிரிவு ஆகியவற்றின்  பணிப்புரைக்கு அமைவாக  பாடசாலைகள் மட்டத்தில்  நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன


இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வித்திணைக்கள அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில்  டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இதற்கு அமைய மட்டக்களப்பு   கல்வி வயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி மதர் ஸ்ரீ லங்கா மற்றும் சுகாதார கழகம் ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் இணைந்து  கல்லூரி அதிபர் அருட்சகோதரி அருள் மரியா தலைமையில் பாடசாலை சுற்றுப்புறச் சூழலை துய்மை படுத்தும் சுகாதார மேம்பாட்டு டெங்கு ஒழிப்பு  பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.


பாடசாலை சுற்றுப்புறச் சூழலை துய்மை படுத்தும் சுகாதார மேம்பாட்டு  நடவடிக்கையில் கல்லூரி மதர் ஸ்ரீ லங்கா மற்றும் சுகாதார கழகம் மாணவர்கள் , கல்லூரி மதர் ஸ்ரீ லங்கா ஆசிரியர் திருமதி  வசந்தி நேரு ,கல்லூரி  சுகாதார கழகம்  ஆசிரியர்களான  திருமதி .சுவீற்றா தர்ஷன் , செல்வி . ஹயாழினி தவராசா மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் கலந்துகொண்டனர்