நீதிபதியின் பெறாமகன் முதலிடத்தை பெற்று தந்தை நீதிபதிக்கும் பெருமை சேர்த்துள்ளார்

(லியோன்)

நீதவான் நீதிமன்ற நீதிபதியின் பெறாமகன் ஸ்ரீதரன் துவாரகன் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்று தந்தை நீதிபதிக்கும் பெருமை சேர்த்துள்ளார்


மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜாவின்  பெறாமகன்  ஸ்ரீதரன் துவாரகன் அகில இலங்கை ரீதியில் பௌதீக விஞ்ஞான பிரிவில்  முதலிடத்தை பெற்று தந்தை நீதிபதிக்கும் ,வடமாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் .


அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்ற புற்றளை  உபகதிர்காமம் பருத்திதுறையை சேர்ந்த ஸ்ரீதரன் துவாரகனை வடமாகாண ஆளுநர்  சந்தித்து பாராட்டுகளை தெரிவித்ததோடு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது .