உழவர் திருநாளை சிறப்பிக்கு விசேட தைத்திருநாள் திருப்பலி

 (லியோன்)


உழுதுண்டு வாழும் தமிழர் பண்பாட்டின் நன்றிப் பெருநாளாம்  உழவர் திருநாளை  சிறப்பிக்கு  விசேட தைத்திருநாள் திருப்பலி மட்டக்களப்பு  தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்தில  பாரம்பரிய கலாசார முறையில் நடைபெற்றது


மட்டக்களப்பு மாவட்டத்தில் உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பண்பாட்டு கலாசார திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டது.


இதேவேளை மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்தில  பாரம்பரிய கலாசார முறையில்  பொங்கலை சிறப்பிக்கும் வகையில் ஆலய முன்றலில் பால் பொங்கி  பண்பாட்டு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மதங்களிடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வினையும் ஏற்படுத்தும் வகையில் இந்த பொங்கல் பண்பாட்டு திருப்பலி இதன்போது ஒப்புக்கொடுக்கப்பட்டது.


மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய பங்குத்தந்தை ரமேஷ் கிறிஸ்டி அடிகளார் தலைமையில் பங்கு மக்களுடன் இணைந்து   பொங்கல் பண்பாட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
 


இதன்போது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு ஆசிவேண்டி விசேட ஆராதனை நடாத்தப்பட்டன.