சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் உழவர் திருநாள் நிகழ்வு

 (லியோன்)

பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் சிறப்பு பொங்கல் நிகழ்வு  மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்றது


உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழ் பண்பாட்டு கலாசார  பொங்கல் நிகழ்வு  மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்றது .

மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தீகா வதுற தலைமையில்  மட்டக்களப்பு ஸ்ரீ வீரகத்தி பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நவரத்தின முரசொலி மாறன்  குருக்களின்  விசேட தீபாராதனை வழிபாடுகளுடன் நடைபெற்ற  பொங்கல் பண்டிகை  நிகழ்வில்  பிரதம விருந்தினராக  கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர்  எச் .டி .கே .எஸ் கபில  ஜயசேகர  கலந்துகொண்டார் .

சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழ் பண்பாட்டு கலாசார முறையில் நடைபெற்ற பொங்கல்  நிகழ்வில்  மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா  அதிபர் W J . ஜாகொட ஆராய்ச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யடவர ,மட்டக்களப்பு   பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் , மட்டக்களப்பு வர்த்த சங்க உறுப்பினர்கள் ,சமூக பொலிஸ் பிரிவு சிவில் குழு  உறுப்பினர்கள்   உட்பட பலரும் கலந்துகொண்டனர் . 


மதங்களிடையே நல்லிணக்கத்தையும் மக்களுடனான சகவாழ்வினையும் ஏற்படுத்தும் வகையில் இந்த பொங்கல் பண்பாட்டு  நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது














 .