காணிகளையும் பொருளாதாரத்தையும் இன்னுமொரு இனத்திற்கு தாரைவார்க்கவா ஆயுதம் ஏந்தி போராடினோம் -பிரசாந்தன் கேள்வி

எமது பொருளாதாரம் காணிகளை இன்னுமொரு இனத்திற்கு தாரைவார்க்கவா தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள்,இருக்கின்ற அரசியல் அதிகாரத்தினையும் மாற்று சமூகத்திடம் அடகுவைப்பதற்கா நாங்கள் வாக்களிக்கின்றோம் என்பதை தமிழ் சமூகம் சிந்திக்கவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பி.பிரசாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்கு கோட்டைக்கல்லாறு வட்டாரத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் த.சுதாகரனை ஆதரித்து பிரசாரக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வேட்பாளர் த.சுதாகரனின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பிரசாரக்கூட்டத்தில் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பி.பிரசாந்தன் பிரதம அதிதியாக கலந்தகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் ரி.சிவநேசன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவி திருமதி செல்வி மனோகர், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் சந்துரு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வேட்பாளரை ஆதரித்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கிஸ்தர்களினால் உரைகள் நிகழ்த்தப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

உள்ளுராட்சிமன்ற தேர்தல் அரசியல் கட்சிகளின் பலத்தினை காட்டும் தேர்தல் அல்ல.கிழக்கில் தமிழர்களின் இருப்பினை தீர்மானிக்கின்ற தேர்தலாகும்.
மட்டக்களப்புமாவட்டத்தில் பல இடங்களில் தமிழர்களின் காணிகள் கபளீகரம்செய்யப்படுகின்றது,எல்லைகள் பறிக்கப்படுகின்றது,நிர்வாகங்கள் முடக்கப்படுகின்றது,தமிழின் ஆண்ட மாகாணசபையினை மாற்று சமூகம் ஆண்டுகொண்டுள்ளது.அடுத்து தனது இருப்பினை எவ்வாறு பாதுகாக்கப்போகின்றான் என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இதுவுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்ன செய்தது என்று கேட்பதற்கு அப்பால் நாங்கள் 62வருடங்களாக வாக்களித்த கட்சி எங்களுக்கு என்ன செய்துள்ளது என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.

இங்குள்ள அரசியல்வாதிகள் தனிப்பட்ட ரீதியில் அரசியலுக்கு அப்பால் நல்ல நண்பர்களாக இருக்கின்றோம்.இங்கிருப்பது தனிப்பிட்ட பிரச்சினையல்ல.அரசியல் கொள்கைகளுக்கான பிரச்சினை.தமிழர்களுக்கு அனைத்தையும் பெற்றுக்கொடுப்போம் என ஆட்சிபீடமேறியவர்கள் எதனையும் மக்களுக்கு செல்லவில்லை.

கிழக்கு மாகாணத்தில் எதனையும் எதிர்பார்த்துவந்த கட்சியல்ல எமது கட்சி.இன்று தோல்வியை தழுவலாம்,நாளை தோல்வியை தழுவலாம்.ஆசனத்திற்காக அரசியல் செய்யும் கட்சி எமது கட்சியல்ல.தமிழர்கள் தனித்துவத்துடன் வாழவேண்டும் என்ற சிந்தனையுடன் வந்தவர்கள் நாங்கள்.

எந்த போராட்டத்தினையும் வலியையும் சந்திக்காத சுமந்திரன் அரசாங்கம் தாரதை பெற்றுக்கொள்வோம் என்று இப்போது சொல்கின்றார்.இந்த கருத்தினை 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் எடுப்பதற்கு முன்;பாக சொல்லியிருந்தால் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய நிலை வந்திருக்காது.

வடகிழக்கினை இணைத்து மாகாணசபை உருவாக்கப்படும்போது ஏற்றுக்கொண்டிருந்தால் முள்ளிவாய்க்கால் பேரவலம் ஏற்பட்டிருக்காது.அன்றெல்லாம் நாங்கள் தமிழீழமே தீர்வென்று கூறிவிட்டு,அப்பாவி இளைஞர்களை போர்க்களத்தில் பலியாக்கி அவர்களின் சமாதிகளில் நின்று அரசியல்செய்துகொண்டு கொழும்பில் தூங்கிக்கொண்டு எதைத்தந்தாலும் வாங்கிக்கொள்வோம் என்று சொல்லும் நீங்கள் இதனையே நாளை உள்ளுராட்சிமன்றத்திலும் சொல்லப்போகின்றீர்கள்.