மட்டக்களப்பு மாவட்ட உழவர் திருநாள் 2018


(லியோன்)

“ உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வர் எனும் தொனிப்பொருளில் ‘ மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் நடத்தப்பட்ட  உழவர் திருநாள் மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் நடைபெற்றது
.  

இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பண்பாட்டு கலாசார ஊர்வலம் மட்டக்களப்பு கோவிந்தன் வீதி ஊடாக பிரதான பஸ் தரிப்பிடம் கல்முனை வீதி ஊடாக மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது .

இதனை தொடர்ந்து  மாவட்ட செயலக முன்றலில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய , மாவட்ட  மற்றும் நந்தி கொடிகள் ஏற்றப்பட்டு  தமிழ்த்தாய் வாழ்த்துடன் பண்பாட்டு உழவர் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமானது .

உழவர் திருநாளை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்த்தின் 14 பிரதேச செயலகங்களின்  பங்களிப்புடன் 14 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு முறைப்படி புதிய நெல் குத்தி அரிசியாக்கி அந்த புதிய அரிசியில்  பொங்கல் பொங்கப்பட்டது .

நடைபெற்ற உழவர் திருநாளில்  பாரம்பரிய கலாசார பாடல்களும்  விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது .


உழவர்களின் வரலாற்று சிறப்பு மிக்க இந்நிகழ்வில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் ,உத்தியோகத்தர்கள் , கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , வர்த்தக சங்க உறுப்பினர்கள் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர் .