தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் கஜமுக சூர சங்காரம்

விநாயகர் சஷ்டி  விரத்தினைசிற்பிக்கும் வகையில் இன்று(24.12.2017) தேற்றாத்தீவுகொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் கஜமுக சூர சங்காரபோர் வெகுசிறப்பாக இடம் பெற்றது.இதனைஆலயபிரதம குரு சிவஸ்ரீ க.கு.சீதாராம்குருக்கள் நிகழ்த்திவைத்தார்.

அந்தவகையில் கஜமுக சூரனைவதைக்கும் பொருட்டு ஆலயத்தில் இருந்து எழுந்தருளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு போர் ஆரம்பமானது.இதன் பொது பல ஆயுதங்களுடன் கஜமுகன் போர் ஈட்டதுடன் இறுதியில் விநாயகர் தனது கொம்புடைத்து கஜமுகனை நோக்கி எறிந்தது கஜமுகன் வதைக்க மூர்சிக வாகனமாக உருவெடுத்தவுடன் அதை தன் வாகனமான தனதாக்கிகொண்டார்.இதனை தொடர்ந்து விநாகப்பெருமானுக்கு பிரய்ச்சித்த அபிஷேகம் இடம் பெற்றது.

இவ் கஜமுக சூர சங்காரம் நிகழ்வினை கண்டு தர்சிக்க பல்லாயிக்கணக்காண அடியார்கள் கலந்து கொண்டனர்.